
ஆன்மிக பாதையில் அடியெடுத்து வைத்த சமந்தா!
அதோடு, ஆன்மிகம் குறித்த ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், ஆன்மிகத்தில் முழு முயற்சி என்பது உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து ஒரு மகத்தான அனுபவத்தை உணர்வதே ஆகும். உங்களது அறியாமையின் விளைவாக உங்களை உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்தில் இருந்து உங்களை நீக்கிக் கொண்டு ஒரு நல்ல படைப்பாளியாக உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்வதுதான் ஆன்மிகம். இது முற்றிலும் ஆனந்தமான எல்லையற்ற பொறுப்பு.
அறிவு மட்டுமே சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்தும் வெளிப்புறத் தோற்றத்தை தருகின்றன. ஆனபோதும் நீங்கள் ஒருபோதும் வெளிப்புற தோற்றத்தை அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையிலேயே அறிவொளியை பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம் என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!