
சல்மானா, அல்லு அர்ஜுனா... அட்லி சாய்ஸ் யாருடையது?
இந்நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனும் சம்மதித்துவிட்டார் என்றார்கள். இதனிடையே, படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பட்ஜெட்டை முடித்து பார்த்த போது 400 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. சல்மான் கான் நடித்தால் அவ்வளவு பட்ஜெட் செலவு செய்து வசூலைப் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.
அட்லி - அல்லு அர்ஜுன் சந்திப்பு கடந்த வருடமே நடந்தது. "புஷ்பா 2" படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்தன. பின்னர் அதிலிருந்து அல்லு அர்ஜுன் பின்வாங்கிவிட்டார். தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அட்லியின் இயக்கத்தில் நடிக்கப் போவது சல்மானா, அல்லுவா என்பது விரைவில் தெரிந்துவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!