
சரியான தேதிக்காகத் தவிக்கும் சலார்
"சலார்" படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை அதிக விலைக்கு சொன்னதால் வினியோகஸ்தர்கள் பலரும வாங்கத் தயங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஓடிடி வெளியீட்டு உரிமை வியாபாரமும் முடிவடையாத காரணம், ஆகியவற்றாலும்தான் பட வெளியீடு தள்ளிப் போய் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, செப்டம்பர் 28ம் தேதிக்குப் பிறகு வேறு எந்த தேதியில் படத்தை வெளியிடுவது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறதாம். பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட சரியான தேதியை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். நவம்பர் மாதம் வெளியிடலாமா அல்லது 2024 பொங்கலுக்கு வெளியிடலாமா என வினியோகஸ்தர்களுடனும் ஆலோசித்து அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!