
தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த்
பிப் 24, 2026
Advertisement
ஏஸ், மதராஸி படங்களுக்கு பிறகு ருக்மணி வசந்துக்கு தமிழில் புதிய பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் கன்னடத்தில் காந்தாரா சாப்டர்-1 படத்துக்கு பிறகு தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் டிராகன் படத்தில் நடித்து வரும் ருக்மணி வசந்த், தற்போது சர்வானந்த் நடிக்கும் இன்னொரு புதிய தெலுங்கு படத்திலும் கமிட்டாகி இருக்கிறார். ஸ்ரீனு வைட்லாஎன்பவர் இயக்கும் இப்படத்தில் ஒரு இளவரசி வேடத்தில் நடிக்கும் ருக்மணி வசந்த் , மேலும் சில புதிய தெலுங்கு படங்களில் நடிப்பதற்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!