ராகவா லாரன்ஸின் ‛ருத்ரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜன 02, 2023
Advertisement
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "ருத்ரன்". இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கே.பி.திருமாறன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். சரத்குமார், நாசர், பூர்ணிமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!