சிவகார்த்திகேயன் ஜோடியாக ஆர்ஆர்ஆர் பட ஆங்கிலேய நடிகை?
பிப் 12, 2022
Advertisement
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 20வது படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஆரம்பமானது. தெலுங்கில் "ஜதி ரத்னலு" படத்தை இயக்கிய அனுதீப் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியான போதே லண்டன், புதுச்சேரி ஆகிய இடங்களை மோஷன் போஸ்டரில் காட்டியிருந்தார்கள். இரண்டு இடங்களையும் கதைக்களமாகக் கொண்ட படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வெளிநாட்டு கதாநாயகி ஒருவர் தேவையாம். ராஜமவுலி இயக்கியுள்ள "ஆர்ஆர்ஆர்" படத்தில் நடித்துள்ள ஒலிவியா மோரிஸ் அந்த வெளிநாட்டு கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் படத்தின் கதாநாயகிகள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…