
ரோமியோ ஜூலியட் இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
ஆக 24, 2023
Advertisement
ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லக்ஷ்மன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பூமி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் பிரபல கன்னட நடிகர் நிகில் குமாரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார். கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லைகா நிறுவனத்திற்கு இது முதல் நேரடி கன்னடம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. யுக்தி தரிஜா கதாநாயகியாக நடிக்கிறார். இன்று பூஜை உடன் இப்படத்தை அறிவித்துள்ளனர். இப்படத்தை குறித்து மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!