ராக்கி டிசம்பர் 23 வெளியீடு
டிச 07, 2021
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி மற்றும் பலர் நடிக்கும் படம் "ராக்கி". தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படம் டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஸ்வரன் அடுத்து செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் "சாணி காயிதம்" படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். "தரமணி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படமான "ராக்கி" வெளிவருகிறது.
"ராக்கி" படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இப்படத்தின் டீசர் இந்த வருடத் துவக்கத்தில் வெளியான போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரின் படத்தின் நாயகன் வசந்த்ரவி கரகர என அறுக்கும் காட்சிதான் டீசரில் இடம் பெற்றது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!