
ஆர்ஜே பாலாஜி நடிக்கும் அடுத்தப் படத்தின் முக்கிய அப்டேட்
மார் 04, 2022
Advertisement
ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தை இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 2018-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான "பதாய் ஹோ" படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார். நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், ஊர்வசி ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார் . இதனிடையே படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வை வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியாக இருப்பதாகத் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!