
சிலம்பம் கற்கிறார் ரித்திகா சிங்
ஏப் 24, 2023
Advertisement
குத்துச் சண்டை வீராங்கணையான ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கிய "இறுதிச் சுற்று" படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து "ஆண்டவன் கட்டளை", "சிவலிங்கா", "ஓ மை கடவுளே" படங்களில் நடித்திருந்தார். இப்போது "கிங் ஆப் கோதா" படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் சிலம்பாட்ட வீராங்கணையாக நடிக்கிறார். தன்னை கொடுமைப்படுத்தியவர்களை சிலம்பத்தை கொண்டே பழிவாங்குகிற மாதிரியான கதை. இந்த படத்திற்காக ரித்திகா சிங் முறைப்படி சிலம்பம் கற்று வருகிறார். இந்த படம் ஓடிடி வெளியீட்டுக்காக தயாராகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!