
அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல
ஏப் 24, 2024
Advertisement
மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக தனது 36வது படத்தில் நடிக்கின்றார். இதனை பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். சமீபத்தில் படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு "ரெட்ட தல" என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு அருண் விஜய் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என தெரிகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!