
மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம்
ஜூன் 09, 2023
Advertisement
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற ஜூலை 14 அன்று தமிழ். தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது . சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துவிட்டார். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர்கள் தெரிவித்தனர். அதன்படி, இந்த படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக படக்குழுவினர்கள் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!