இரண்டே வாரங்களில் ஓடிடியில் ரெபல்
ஏப் 06, 2024
Advertisement
நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 22ம் தேதி வெளியான படம் "ரெபல்". இப்படத்திற்கு சிறப்பான விமர்சனங்களோ, வரவேற்போ கிடைக்கவில்லை. அதனால் படம் எதிர்பார்த்ததை விடவும் மோசமான வசூலையே பெற முடிந்தது. இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்படத்தை இன்று முதல் ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
பொதுவாக ஒரு தமிழ்ப் படம் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை தமிழ்த் திரையுலகத்தில் பாலோ செய்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்தப் படத்தை இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய படங்கள் வெளியானால் எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் தர வேண்டும் என ஒரு கோரிக்கை உள்ளது. அது குறித்து திரையுலக சங்கங்கள் விரைவில் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்கள். "ரெபல்" இப்படி இரண்டு வாரங்களில் வெளியானதை வைத்து மேலும் சில படங்கள் இப்படி வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!