மினி தியேட்டர் வேண்டும் - ரவீந்தர் சந்திரசேகர்
ஜூன் 16, 2021
Advertisement
மிக மிக அவசரம் படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடக்சன் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கை: சமூக அக்கறை மிகுந்த படைப்புகள் மீதும், செந்தமிழின் மீதும் தனி அக்கறை கொண்டிருந்தவர் கலைஞர். அவரது அடிச்சுவட்டில் பயணிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சில கோரிக்கைளையும் வைக்க விரும்புகிறேன்.
1. தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு, சென்னையில் படப்பிடிப்புகளுக்கு குறைந்த கட்டணம் என கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த முத்தான திட்டங்களை மீண்டும் தொடர வேண்டுகிறேன்.
2. கொரோனா காலத்தில் தியேட்டர்கள் இயங்காததால், மின்சாரக் கட்டணம் மற்றும் சொத்துவரியை தள்ளுபடி செய்தோ அல்லது அவற்றில் சலுகை அளித்தோ தியேட்டர் உரிமையாளர்களின் சுமையை குறைக்க வேண்டும்.
3. அடுத்தடுத்த கட்ட தளர்வுகளின் போது தியேட்டர்களை திறக்க வேண்டும்.
4. கொரோனா பாதிப்புகள் மேலும் சரிவடையத் துவங்கியதும், கட்டுப்பாடுகளுடன் கூடிய படப்பிடிப்புகளை அனுமதித்து, திரையுலகத் தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டுகிறேன்.
5. திரைக்கு வர சிரமப்படும், ‛மிக மிக அவசரம்" போன்ற சமூக அக்கறை மிக்க படங்களை வெளியிட, மாநிலமெங்கும் மினி தியேட்டர்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!