சூர்யாவை இயக்க போகிறார் ரவிக்குமார்
நவ 03, 2023
Advertisement
விஷ்ணு விஷால் நடித்த ‛இன்று நேற்று நாளை" படத்தை இயக்கிய ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கும் ரவிக்குமார், அந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்த படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா, அதன்பிறகு சுதா மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் நடித்த பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!