
தெலுங்கு படத்தில் வெங்கடேச பெருமாளாக நடிக்கும் ரவிமோகன்!
ஆக 05, 2026
Advertisement
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த "பராசக்தி" படத்திற்கு பிறகு "ஜீனி, கராத்தே பாபு", ராகவா லாரன்ஸூடன் "பென்ஸ்" போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்நிலையில் தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்கும் "வட்டி காசுல வாடா" என்ற நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணி கொண்ட படத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக ரவி மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை வைத்துப் பார்க்கும்போது, வெங்கடேஸ்வர சுவாமிக்கும், கதாநாயகனுக்கும் இடையிலான காட்சிகள் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. இப்படத்திற்கு தேஜ் உப்பலபதி கதை எழுதி இயக்குகிறார். ஏகே எண்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ராமபிரம்மம் சுங்கரா இப்படத்தைத் தயாரிக்கிறார். "பிந்தாஸ்" படத்திற்குப் பிறகு மஞ்சு மனோஜ் மற்றும் ஏகே எண்டர்டெயின்மென்ட்ஸ் கூட்டணி மீண்டும் இணையும் படம் இது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!