ராஷ்மிகாவின் மைசா கேரள படப்பிடிப்பு நிறைவு
மே 07, 2026
Advertisement
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திருமணத்திற்குப் பிறகு, ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட படங்களில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் உருவாகி வரும் "மைசா" படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இயக்குனர் ரவீந்திர புல்லே இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் ராஷ்மிகாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த வீரமும் போர்க்குணமும் மிக்க ஒரு பெண் கதாபாத்திரம். அதனால் படத்தில் இவருக்கு ஆக்ஷன் காட்சிகளும் நிறைய இருக்கின்றன.
அந்த வகையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சண்டைக் காட்சி ஒன்றை கேரளாவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் படமாக்கி வந்தனர். இந்தச் சண்டைக் காட்சிகளுக்காகத் தாய்லாந்தில் முறையான பயிற்சியை எடுத்திருந்தார் ராஷ்மிகா. இந்த நிலையில், தற்போது திட்டமிட்டபடி இந்த ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டு கேரள படப்பிடிப்பு நிறைவுற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கொண்ட ராஷ்மிகா, தனது சண்டைப் பயிற்சியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, "மற்றவர்களைக் காயப்படுத்தாமல் எப்படி சண்டைக் காட்சிகளில் நடிப்பது மற்றும் அடிப்பது என்று கற்றுக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி" என்று நகைச்சுவையாகவும் கூறியுள்ள அவர், "உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன், விரைவில் மீண்டும் சந்திப்போம்" என்றும் கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!