சொந்த ஊரில் திருமண வரவேற்பு நடத்திய ராஷ்மிகா மந்தனா
ஏப் 08, 2026
Advertisement
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் காதல் ஜோடிகளாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பிப்ரவரி மாதம் 26ம் தேதி உதய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கு மற்றும் கொடவா முறைப்படி அவர்களது திருமணம் நடைபெற்றது. அதன்பின் மார்ச் 4ம் தேதி ஐதராபாத்தில் திரையுலக நண்பர்களுக்காக திருமண வரவேற்பு நிகழ்வை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் கூர்க் நகரைச் சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. பெங்களூருவில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங்கில் நுழைந்தார். அங்கிருந்து கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின் தெலுங்கில் நடிக்கப் போய் அங்கும் பிரபலமானார். தன்னுடன் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
தனது சொந்த ஊரின் மீது அபிமானம் உள்ள ராஷ்மிகா அவர்களது உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இரு தினங்களுக்கு முன்பு கூர்க்கில் திருமண வரவேற்பு நிகழ்வை நடத்தியுள்ளார். அதில் ராஷ்மிகா பாரம்பரிய "கொடவா" முறைப்படி புடவை அணிந்து கலந்து கொண்டார். எங்கு சென்றாலும் தனது கலாச்சாரத்தையும் முறையையும் கைவிடாமல் இருக்கிறார் ராஷ்மிகா.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!