
ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு
இந்த படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா, தனது திரை வாழ்க்கையிலேயே மிகவும் துணிச்சலான மற்றும் வன்முறை நிறைந்த ஆக் ஷன் நடிப்பை வழங்கியுள்ளார். இயல்பான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில், அவர் தலைப்புக்கான கதாபாத்திரத்தை வியக்க வைக்கும் தீவிரத்துடன் சித்தரிக்கிறார். டீசரின் இறுதித் தருணங்களில் அவர் எழுப்பும் கர்ஜனை, "மைசா"வின் கட்டுக்கடங்காத கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது. "மைசா" எனும் பெண் கதாநாயகியை வலிமைமிக்க கோண்ட் பழங்குடிப் பெண்ணாக சித்தரிக்கிறது.
தெலுங்கானா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பான்-இந்தியா அளவில் படத்தை வெளியிட உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!