
அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்த ராணா டகுபட்டி
தெலுங்கில் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த "விராட பர்வம்" படம் சுமாராகத்தான் ஓடியது. அப்படத்தின் பிரமோஷனுக்குப் பிறகு அவர் மீடியா பக்கம் வருவதில்லை.
இந்நிலையில் ராணா டகுபட்டி தன்னுடைய இரண்டாம் ஆண்டு திருமண நாளை மனைவி மிஹீகாவுடன் கொண்டாடியுள்ளார். தற்போது இந்த ஜோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தங்களது திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை மட்டும் ராணாவின் மனைவி மிஹீகா பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவர் ராணாவையும் "டேக்" செய்துள்ளார்.
தனது இன்ஸ்டாவில் அனைத்துப் பதிவுகளையும் டெலிட் செய்துள்ள ராணா தனது திருமண நாள் கொண்டாட்டப் புகைப்படங்களைக் கூட அவரது கணக்கில் பதிவிடவில்லை. "விராட பர்வம்" படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்க ராணா இன்னும் சம்மதிக்கவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!