நடிகராக பிஸியாகும் ராஜீவ் மேனன்
ஏப் 26, 2023
Advertisement
ஒளிப்பதிவாளராக திகழ்ந்த ராஜீவ் மேனன், ‛மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளம் மையம்" போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அரசு அதிகாரி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ரசிகர்களை மட்டும் அல்லாமல் இயக்குனர்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்தில் ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இன்னும் இவரை தெலுங்கு படங்களில் நடிக்க பல இயக்குனர்கள் அணுகி வருகிறார்களாம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…