அண்ணாத்த பிரமோஷன் ஆச்சரியப்பட வைத்த ரஜினிகாந்த்
நவ 16, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நம்பர் 1 நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த பல வருடங்களாகவே அவருடைய படங்களுக்காக அவர் பிரத்யேக பேட்டிகளை கொடுப்பதில்லை. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாரான "2.0" படத்தின் போது டிவி பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அதன்பிறகு அவர் நடித்து வெளிவந்த "பேட்ட, தர்பார்" படங்களின் போதும் கூட அவர் எந்த பேட்டியையும் கொடுக்கவில்லை. அப்படங்களின் இயக்குனர்களும், நடிகர்கள், நடிகைகளும் தான் கொடுத்திருந்தார்கள்.
ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த படம் "அண்ணாத்த". இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. மழை காரணமாக கடந்த வாரத்தில் வசூல் மிகவும் குறைந்தது என்றும் சொன்னார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது மகள் உருவாக்கியுள்ள ஹுட் ஆப் மூலம் "அண்ணாத்த" படம் பற்றி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் "ஹுட் ஆப்" வளர்வதற்கும், "அண்ணாத்த" படத்தின் வசூல் ஏறுவதற்கும் அவர் இப்படி பிரமோஷன் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
மேலும், "விஸ்வாசம்" படம் பற்றி அவர் பாராட்டியிருப்பதால், இதுவரை "அண்ணாத்த" படத்தை போய் பார்க்காத அஜித் ரசிகர்களும் படத்தைப் பார்க்க வாய்ப்புள்ளது என படத்தை வாங்கியவர்களும், திரையிட்டவர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!