
படம் வெளியாகும் முன்பே பாராட்டிய ரஜினிகாந்த்: ஏன் தெரியுமா?
பிப் 04, 2026
Advertisement
மதன் இயக்கத்தல் "டூரிஸ்ட் பேமிலி" இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிக்கும் "வித் லவ்" படம், நாளை மறுநாள்தான் ரீலீஸ் ஆகிறது. ஆனாலும் இப்பவே "வித் லவ் வெரி நைஸ், சூப்பர்ப் ரொம்ப நல்லா இருக்கு" என பாராட்டி இருக்கிறார் ரஜினிகாந்த்.
மேலும், படத்தை நேற்றே பார்த்து இருக்கிறார். இப்படி படத்தின் மீது அவர் ஆர்வம் காண்பிக்க முக்கியமான காரணம் சவுந்தர்யா. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். அதனால், மகள் படம் வெற்றி அடைய வேண்டும். மகளுக்கு தன்னால் ஆன உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, படம் பார்த்துவிட்டு இப்படி பாராட்டி இருக்கிறார்.
பொதுவாக, சமீபகாலமாக தியேட்டருக்கு சென்று ரஜினி படம் பார்ப்பது இல்லை. தனது வீட்டில் அல்லது பிரிவியூ தியேட்டரில் அல்லது ஒரு பிரபல டிவி நிறுவனத்துக்கு சொந்தமான பிரிவியூ தியேட்டரில்தான் பார்க்கிறார். ஆனால், வித்லவ் படத்தை படத்தை பல ஆண்டுகளுக்குபின் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து இருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கால்ஷீட் கொடுத்து விட்டோம். இளைய மகளுக்கு அது கொடுத்தும் சரியாக செட்டாகவில்லை. அவர் தயாரிக்கும் இந்த படம் வெற்றி பெற வேண்டும். மகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, தனது கட்டுப்பாடுகளை அவர் உடைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!