‛வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி
மே 14, 2024
Advertisement
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "வேட்டையன்" . ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் வேட்டையன் படப்பிடிப்பை மும்பை, கேரளாவில் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று வேட்டையன் படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!