ரஜினி 171 : நாளை அறிமுக வீடியோ படப்பிடிப்பு
ஏப் 09, 2024
Advertisement
ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171வது படம் பற்றிய அறிமுக போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இப்படம் பற்றி அடுத்தடுத்து சில அப்டேட்கள் வெளிவந்தன. அவற்றில் எதுவுமே அதிகாரப்பூர்வமானது அல்ல. ஆனால், படத்தில் மல்டிஸ்டார்கள் இடம் பெறுவது மட்டும் உறுதி என்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிப்பை தனது ஸ்டைலில் ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனை வைத்து "விக்ரம்", விஜய்யை வைத்து "லியோ" படங்களுக்காக அப்படித்தான் அறிமுக வீடியோவை வெளியிட்டார். அவை பரபரப்பாகப் பேசப்பட்டன. அதே பாணியை ரஜினிக்கும் பாலோ செய்கிறார்.
நாளை சென்னையில் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டுடியோவில் அதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அந்த அறிமுக வீடியோ தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகுமா என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!