எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ்
செப் 20, 2024
Advertisement
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல் , விஜய், ரஜினி என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரிக்க தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக "பென்ஸ்" என்ற படம் உருவாகிறது என அறிவித்தனர். லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார். தற்போது இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.
இந்நிலையில் இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த விக்ரம், கைதி, லியோ போன்ற படங்களை போல் எல்சியு எனப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சல் சாயலில் இடம் பெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!