ராதேஷ்யாம் வெளியீட்டு விழா - மும்பையில் ஆரம்பம்
மார் 02, 2022
Advertisement
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் "ராதேஷ்யாம்" படம் அடுத்த வாரம் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகப் போகிறது.
"பாகுபலி 1, 2, சாஹோ" ஆகிய படங்களுக்குப் பிறகு பான்--இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸின் அடுத்த படமாக இது வெளியாகிறது. "சாஹோ" படம் ஹிந்தியில் மட்டும்தான் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளிவந்தும் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதால் "ராதேஷ்யாம்" படத்தை பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இன்று மும்பையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா ஆரம்பமானது. தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த விழாவை நடத்த உள்ளார்கள். நாளை அல்லது நாளை மறுதினம் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பதிப்பிற்காக நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
"பாகுபலி 1, 2" படங்கள் தமிழில் லாபகரமான வசூலைத் தந்த படங்களாக இருந்தது. "சாஹோ" இங்கும் சரியாகப் போகவில்லை. "ராதேஷ்யாம்" எப்படி அமையப் போகிறது என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!