சில மணி நேரங்களில் 15 மில்லியனைக் கடந்த புஷ்பா டிரைலர்
டிச 07, 2021
Advertisement
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "புஷ்பா". இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியூபில் வெளியிடப்பட்டது. நேற்று மாலையே வெளியாக வேண்டிய டிரைலர் தொழில்நுட்பக் கோளாறால் சில மணி நேரங்கள் கழித்து இரவில்தான் வெளியானது.
இருந்தாலும் டிரைலரைப் பார்க்க அதிக ஆர்வத்துடன் ரசிகர்கள் இருந்ததால் இரவு நேரத்திலேயே பல மில்லியன் பேர் டிரைலரைப் பார்த்தனர். அதனால், இன்று காலைக்குள் 4 மொழிகளில் சேர்த்து 15 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அதிகபட்சமாக தெலுங்கில் 7 மில்லியனைக் கடந்துள்ளது. ஹிந்தி டிரைலர் இன்றுதான் வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!