
புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
செப் 11, 2023
Advertisement
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛புஷ்பா". இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இதே கூட்டணியில் புஷ்பா 2 - தி ரூல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் இந்த படம் தயாராகி வருகிறது. 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி அடுத்தாண்டு ஆக., 15ல் இந்த படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக படத்தின் திரைக்கதை பணிகள் முடியாததால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வந்தது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதி இவ்வளவு தூரம் தள்ளிப் போய் உள்ளது. முதல்பாகத்தை போலவே தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பன் மொழிகளிலும் உருவாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!