
டிவி ஒளிபரப்பில் அதிக ரேட்டிங் பெறாத புஷ்பா 2
இந்நிலையில் இப்படத்தின் முதல் டிவி ஒளிபரப்பு சமீபத்தில் நடந்தது. அதற்குரிய ரேட்டிங் வெளிவந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "புஷ்பா 2" படத்திற்கான டிவி ரேட்டிங் 12 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இது "புஷ்பா 1" படத்திற்குக் கிடைத்த ரேட்டிங்கான 22 புள்ளிகளை விட மிகவும் குறைவு.
அல்லு அர்ஜுன் நடித்து வெளியான "அலா வைகுந்தபுரம்லோ" படம் முதல் டிவி ஒளிபரப்பில் பெற்ற ரேட்டிங் 29 புள்ளிகள். அவற்றுடன் ஒப்பிடும் போது இவ்வளவு பிரம்மாண்டமாகத் தயாரான "புஷ்பா 2", அவ்வளவு கோடிகள் வசூலித்தும் டிவி ரேட்டிங்கில் இப்படி குறைந்து போனதற்கான காரணத்தை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!