விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்?
மார் 18, 2025
Advertisement
தெலுங்குத் திரையுலகத்தில் சில பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் பூரி ஜெகன்னாத். ஆனால், அவர் கடைசியாக இயக்கிய "லைகர், டபுள் இஸ்மார்ட்" ஆகிய படங்கள் சரியாகப் போகாமல் படுதோல்வி அடைந்தன. அதனால், அவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கு ஹீரோக்கள் யோசித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை பூரி ஜெகன்னாத் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் பூரி. அந்தக் கதையைக் கேட்ட விஜய் சேதுபதி, கதை மிகவும் பிடித்திருப்பதாகவும் விரைவில் ஆரம்பிக்கலாம் என்று சொன்னதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி மொழி ரசிகர்களிடமும் பிரபலமாக உள்ளார். அதனால், இந்தப் படத்தையும் பான் இந்தியா படமாக உருவாக்க பூரி முடிவு செய்துள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…