
சோழன் விரைவில் வருகிறார் : பொன்னியின் செல்வன் அப்டேட்
ஜூலை 02, 2022
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பக்கங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். சரித்திர கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். ஏ. ஆர் .ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் வெளியாகும் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் குறித்த ஒரு அப்டேட் வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். அந்த வீடியோவில், வருகிறான் சோழன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனால் விரைவில் இப்படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!