குபேரா இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா
மார் 24, 2025
Advertisement
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தற்போது தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் "குபேரா" படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஜுன் 20ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சேகர் கம்முலா, “குபேரா" படத்தை இயக்குவதில் பெருமையாக உணர்கிறேன். படத்தின் கதை தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா போன்ற நடிகர்களைக் கேட்டது. படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் நான் எந்த விதமான மெசேஜும் சொல்வதில்லை. அதேசமயம் நாட்டில் உள்ள சமுதாயக் கட்டமைப்பை எனது படங்கள் பாதிக்காத அளவில்தான் இருக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் இதை மனதில் வைத்தே கதை எழுதுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
"குபேரா" படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது, நிச்சயம் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!