விஜய்க்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்
ஜூலை 25, 2022
Advertisement
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க போகிறார். டான் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன், நடிகர் கவின் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து துபாய் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற பிரியங்கா மோகன், தற்போது பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெளிநாடுகளில் எடுத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியங்கா மோகன், தற்போது லண்டனில் எடுத்துக்கொண்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் இந்தியா திரும்ப இருக்கும் பிரியங்கா மோகன், அந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67 வது படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தமிழில் முன்னணி நடிகை பட்டியலில் பிரியங்கா மோகன் இடம் பிடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!