
நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ்
பிப் 27, 2026
மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் மலையாளத்தில் படங்கள் நடிப்பது மட்டுமின்றி மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களும் இயக்கி வருகிறார். தற்போது ராஜமவுலி இயக்கி வரும் வாரணாசி படத்தில் நடித்து வருகிறார் பிரித்விராஜ். மகேஷ் பாபு இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்க, இவர் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில், அடுத்தபடியாக தெலுங்கில் சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் பிளடி ரோமியோ என்ற படத்திலும் இணைந்திருக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்திலும் அவர் வில்லன் நடிப்பதாக கூறப்பட்டாலும் படக்குழு அதை உறுதிப்படுத்தவில்லை.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!