
அக்.,21ல் வருகிறார் ‛பிரின்ஸ்
அக் 05, 2022
Advertisement
‛டான்" படத்திற்கு பின் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் மரியா நாயகியாக நடிக்க, சத்யராஜ் , யோகி பாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் மாதம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அது குறித்து படக்குழு ஒரு போஸ்டரும் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!