
தனுஷூடன் நடிக்கு ராஜா ராணி நடிகை
ஜன 26, 2022
Advertisement
மலையாள நடிகையான பிரவீணாவுக்கு சின்னத்திரையில் பலரும் ரசிகர்களாக உள்ளனர். தற்போது ராஜா ராணி 2 தொடரில் சந்தியாவின் மாமியாராக நடிப்பில் கலக்கி வருகிறார். பிரவீணா அவ்வப்போது சினிமாக்களிலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தில் இணந்துள்ளார். தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் படம் வாத்தி. இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில், சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ், பிரவீணா சேர்ந்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரவீணா முன்னதாக சாமி 2, கோமாளி, வெற்றிவேல் ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!