
பிரதீப் ரங்கநாதன் உதவியாளரின் லவ் புராஜக்ட்
பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றியவர் டி.ஐ.கபில். தற்போது அவர் "லவ் புராஜக்ட்" என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். கதாநாயகியாக சங்கீதா நடித்துள்ளார். மற்றும் சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சிமியோன் டெல்பர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் இயக்குநர் கபில் கூறும்போது “இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம். புதிய திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறோம். காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கம். இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!