
பொன்னியின் செல்வன் : திடீர் மாற்றம்
ஜூன் 23, 2022
Advertisement
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படமும் ராஜராஜ சோழன் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சாவூரில் நடந்த திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் தற்போது வேறு இடத்தில் டீசரை வெளியிட உள்ளனராம். அதோடு டீசரும் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் டீசருக்கு முன்னதாக படத்தின் முதல்பாடலை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!