ககாமுச்சி நகரில் சோழர்களின் பயணம்
ஏப் 25, 2023
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள "பொன்னியின் செல்வன் 2" இந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்வுகளை "சோழர்களின் பயணம்" என தலைப்பு வைத்து ஏப்ரல் 15ம் தேதி சென்னையில் ஆரம்பித்தார்கள். அடுத்து கோவை, மீண்டும் சென்னை, டில்லி, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு, சில சிறப்பு பேட்டிகள் ஆகியவற்றுடன் நடந்தது. நேற்றும், இன்றும் அதே நிகழ்வுகள் "ககாமுச்சி" நகரில் நடைபெற்று வருகிறது.
அது என்ன "ககாமுச்சி" எனக் கேட்பீர்கள். மும்பையின் மிகப் பழமையான பெயர் தான் "ககாமுச்சி". நாளை திருச்சியில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கடுத்த நாள் ஏப்ரல் 27ம் தேதி சென்னையில் படத்தில் நடித்துள்ள பல நட்சத்திரங்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் "சோழர்களின் பயணம்" இனிதே நிறைவடைய உள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு வரை சோழர்களின் பயணம் நடைபெறுவது குறிப்பிட வேண்டிய ஒன்று. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை விடவும் இந்த இரண்டாம் பாகத்தை இன்னும் அதிகமானோர் பார்க்கலாம் என்கிறார்கள். அதனால், படத்தின் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!