விறுவிறுப்பான முன்பதிவில் பொன்னியின் செல்வன் 2
ஏப் 26, 2023
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன் 2" படம் நாளை மறுதினம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. ஐமேக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களுக்கும் முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் பள்ளிகளுக்கும் தேர்வுகள் முடிவடைகிறது. வார இறுதிநாள் வரை பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பான முன்பதிவு நடைபெற்றுள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை மே 1 விடுமுறை தினம் என்பதால் இந்த நான்கு நாட்களிலேயே படம் குறிப்பிடத்தக்க அளவில் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தைப் பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் தவறாமல் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. முதல் பாகம் 500 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் இரண்டாம் பாகமும் அதே 500 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதையில் அதிக திருப்பங்கள் இருப்பதாலும், படம் வெளியான பின் படம் பற்றிய விவாதங்கள் அதிகமாகும் போது இன்னும் அதிகமான ரசிகர்களை படம் வரவழைக்கும் என்று தியேட்டர் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!