3 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்ட டெலிடட் சீன்
ஜன 10, 2022
Advertisement
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி வெளிவந்த படம் "பேட்ட". இன்றுடன் படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த கொண்டாட்டத்துக்காக படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள்.
"இன்னொரு டீ சாப்பிடலாமா" என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள அந்தக்காட்சியில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். ஒரு படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகு டெலிடட் சீன் வெளியிடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் இதையும் டிரெண்டிங்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்பராஜ் இன்றைய மூன்றாம் வருடக் கொண்டாட்டம் குறித்து, “என்னுடைய மற்றும் எனது குழுவினரின் வாழ்க்கையில் மிகவும் மேஜிக்கலான நாளின் மூன்றாவது வருடம்…லவ் யு தலைவா…” எனக் குறிப்பிட்டு படத்தின் புது போஸ்டருடன் டுவீட் செய்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!