விடுதலை, பத்து தல சிறப்புக் காட்சிகளைப் பார்த்த படக்குழு
மார் 29, 2023
Advertisement
2023ம் ஆண்டின் முக்கியமான படங்களாக எதிர்பார்க்கப்படும் "பத்து தல" படம் நாளையும், "விடுதலை" படம் நாளை மறுநாளும் வெளியாக உள்ளன. இந்தப் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து படப்பிரதி ரெடியானதுமே படக்குழுவினர் அவர்களது படங்களை சிறப்புக் காட்சிகளாகப் பார்த்து ரசித்துள்ளனர்.
"விடுதலை" படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குனர் வெற்றிமாறன், இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்துள்ளனர். "பத்து தல" படத்தின் சிறப்புக் காட்சி சில தினங்களுக்கு முன்பு சிம்புக்காக நடந்தது. அடுத்து சிம்புவின் அப்பா டி ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோருக்காக நடந்தது.
இரண்டு படங்களுமே சிறப்பாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்குமான முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வருகிறது. படம் வெளிவந்த பிறகுதான் இப்படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!