
எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்... - வெளியானது சிம்புவின் ‛பத்து தல டீஸர்
கன்னியாகுமரி பின்னணியில் மணல் கடத்தல் தாதாவாக ஏஜிஆர் எனும் ஏஜி ராவணாவாக அதிரடி காட்டி சிம்பு நடித்துள்ளார். அரசியல்வாதியாக கவுதம் மேனன் நடித்துள்ளார். கவுதம் கார்த்திக் அடியாள் மாதிரியான வேடத்திலும், பிரியா பவானி சங்கர் அரசு அதிகாரி போன்றும் நடித்துள்ளார்.
‛‛மண்ண ஆள்றவனுக்கு தான் எல்ல... மண்ண அள்ற எனக்கு அது இல்ல...., நான் படியேறி மேல வந்தவன் இல்ல... எதிரிகள மிதிச்சு ஏறி மேல வந்தவன்..., என்னால எத்தன பேரு செத்தானும் தெரியாது எத்தன பேரு வாழ்ந்தானும் தெரியாது..."" என்பது மாதிரியான பவர்புல் பஞ்ச் வசனங்களும் டீஸரில் இடம் பெற்றுள்ளனர். அதற்கு ஏற்றபடி ரஹ்மானின் பின்னணி இசையும் அசத்தலாக உள்ளது.
ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த டீஸர் ஒன்றரை மணிநேரத்தில் 5 லட்சம் பார்வைகளை கடந்து, டிரெண்ட் ஆனது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!