
ஆஸ்கருக்குள் நுழைந்தது பார்க்கிங்
ஒரே வளாகத்தில் குடியிருக்கும் இரண்டு குடும்பத் தலைவர்களுக்கு இடையே கார் நிறுத்துவதில் ஏற்படும் ஈகோ எப்படியெல்லாம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. தற்போது இந்த படத்தின் திரைக்கதை ஆஸ்கர் விருது அமைப்பின் நூலகத்தில் வைக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் சினிமா கற்கும் உலக திறமையாளர்கள் இந்த திரைக்கதையை படிக்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இது தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு தயாரிப்பாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் “மிகப்பெரிய படைப்புகளுக்கு மத்தியில் எனது படைப்பும் இடம்பெறுவது, பெருமையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ""பார்க்கிங் படம் உங்கள் இதயங்களிலிருந்து ஆஸ்கர் நூலகம் வரை சென்றிருக்கிறது. ஒரு நல்ல கதை அதற்கான இடத்தை தானே தேடி போகும். இந்த நம்பமுடியாத பயணத்திற்கும் என் பார்க்கிங் அணிக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!