
பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ்
ஜூன் 03, 2026
Advertisement
இயக்குனர் பாண்டியராஜ், நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி ஆகியோரை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து "பரிமளா அண்ட் கோ " என்கிற படத்தை இயக்கியுள்ளார். இவர்களுடன் மிஷ்கின், சஞ்சனா, சாண்டி, சிங்கம் புலி, பக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ், தமிழ் குமரன் மற்றும் பசங்க புரொடக்சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஒரு கொலையை வைத்து குடும்ப பின்னணியில் இந்த படத்தை எடுத்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூன் 5ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் படத்தை பார்த்து யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!