
ஓவியா நடிக்கும் க்ளிக்
சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் பேனரில் ராஜாபிரபு தயாரித்து, நடிக்கும் யூத்புல் சஸ்பென்ஸ் என்டர்டெயினர் படம் "கிளிக்". துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு புதுமையான கதையாக, இன்றைய தலைமுறையினருடன் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் உருவாகியுள்ளது.
ஜென் சி (Gen-Z) கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகும் "கிளிக்", உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கலகலப்பான திரை அனுபவத்தை வழங்க உள்ளது என்கிறார்கள் படக்குழுவினர். இப்பொழுது கேரளாவில் திருச்சூரில் வசிக்கும் ஓவியா இந்த பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…