
இந்திய அளவில் 2021 ஓடிடி வெளியீட்டில் 2ம் இடம் பிடித்த ஜெய் பீம்
தியேட்டர்களில் வெளியாகும் படங்களின் வரவேற்பு என்பது அதன் வசூலை வைத்து கணக்கிட முடியும். ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டன என்பது குறித்து அந்நிறுவனங்கள் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடுவதில்லை. மொத்தமாக பலத்த வரவேற்பு என்று சொல்வதுடன் முடித்துக் கொள்கிறார்கள்.
திரைப்படங்கள், ஓடிடி வெளியீடுகள் ஆகியவற்றைப் பற்றி பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி செய்யும் தனியார் நிறுவனமான ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் 2021ல் ஓடிடியில் இந்திய அளவில் நேரடியாக வெளியான படங்களின் வரவேற்பு பற்றி டாப் 10 பட்டில் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா, லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன் நடித்த "ஜெய் பீம்" படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அஜித் நடித்த "பில்லா, ஆரம்பம்," படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கிய ஹிந்திப் படமான "ஷெர்ஷா" முதலிடத்தைப் பிடித்துள்ளது. தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலிகான் நடித்த "அத்ராங்கி ரே" 10வது இடத்தைப் பிடித்துள்ளது. மலையாளப் படமான டொவினோ தாமஸ் நடித்த "மின்னல் முரளி" 6ம் இடத்தைப் பிடித்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!