
காதலியை கரம்பிடிக்கிறார் கவின் : ஆக., 20ல் திருமணம் என அறிவிப்பு
தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இடம் தெரிவிக்கப்படவில்லை. கவினின் சொந்த ஊரில் நடக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக 2019ல் நடைபெற்ற "பிக் பாஸ் சீசன் 3" நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதில் மற்றுமொரு போட்டியாளராகக் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியாவைக் காதலிப்பதாக பரபரப்பு எழுந்தது. ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பின் இருவரும் அவரவர் சினிமாவில் பயணிக்க தொடங்கி விட்டனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!