அக்., 5, ‛சேவ் தி டேட்டிற்கு விடை கிடைத்தது : இயக்குனர் ஆனார் வனிதா
அக் 05, 2024
Advertisement
நடிகை வனிதா சர்ச்சைக்கு பேர் போனவர். குடும்ப பிரச்னை, மூன்று முறை திருமணம், பிக்பாஸ் என பல சர்ச்சைகளில் சிக்கினார். சர்ச்சைகளையே தனக்கு சாதமாக்கி தற்போது படங்களில் பிஸியாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன் கடற்கரை ஒன்றில் நடன இயக்குனர் ராபர்ட்டிடம் வனிதா தனது காதலை புரொபோஸ் செய்வது போன்றும், அதில் ‛Save the Date", அக்., 5 என குறிப்பிட்டு ஒரு போட்டோ வெளியாகி உள்ளது. இதை வைத்து வனிதா நான்காவது திருமணம் செய்யபோவதாக செய்தி பரவுகிறது.
உண்மையில் இருவரும் ஒரு படத்தில் நடித்துள்ளனர். அதற்காக இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு படத்திற்கு விளம்பரத்தையும் கூடவே பரபரப்பையும் பற்ற வைத்தனர். இந்நிலையில் அக்., 5ம் தேதியான இன்று அந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார் வனிதா. அது அவர்கள் நடித்துள்ள ‛மிசஸ் அண்ட் மிஸ்டர்" படமாகும். அந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதோடு இந்த படத்தை வனிதாவே இயக்கி, தனது மகள் ஜோவிகா பெயரில் தயாரிக்கவும் செய்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!